சமையலறை

மாங்காய் உடனடி ஊறுகாய்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மாங்காய்த் துண்டுகள் - ஒரு கப்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

வெந்தயப் பொடி, காரப் பொடி, கடுகு - தலா கால் டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மாங்காயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதனுடன் உப்பு சேர்த்துப் பிசறி வையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள், வெந்தயத் தூள், காரப் பொடி சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அதில் கறிவேப்பிலை சேர்த்து, மாங்காய்க் கலவையில் சேர்த்துக் கலக்குங்கள். ஐந்து நிமிடம் ஊறவைத்துப் பரிமாறுங்கள். எளிதில் தயாரித்துவிடக் கூடிய உடனடி ஊறுகாய் இது. இதைத் தொட்டுக்கொண்டால் வழக்கத்தைவிட ஒரு பிடி அதிகமாக சாப்பாடு உள்ளே இறங்கும்.

SCROLL FOR NEXT