சமையலறை

முந்திரிக் கொத்து

சுலைஹா பீவி

என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு - தலா கால் கிலோ

தேங்காய் - 1

வெல்லம் - அரை கிலோ

புழுங்கல் அரிசி - 1 கைப்பிடியளவு

பச்சரிசி மாவு - கால் கிலோ

முட்டை - 1

மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தேங்காயைத் துருவி, சிவக்க வறுக்க வேண்டும். பிறகு உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக சிவக்க வறுக்கவும். அரிசியைப் பொரிந்து வருவதுபோல வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றைத் தனித்தனியாகக் குருணை போல் பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஒட்டும் பதம் வந்தவுடன் வறுத்துவைத்த தேங்காய், பொடித்துவைத்திருக்கும் பொடியைக் கலந்து கிளறவும்.

கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். பச்சரிசி மாவுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் கலந்து தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும். உருண்டைகளை இந்த மாவில் முக்கியெடுத்து சுடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சுலைஹா பீவி

SCROLL FOR NEXT