சமையலறை

ரக்டா வடை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மசால் வடை - 6

வெள்ளைப் பட்டாணி அல்லது

பச்சைப் பட்டாணி – அரை கப்

வெங்காயம், தக்காளி – தலா ஒன்று

மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாயுடன் இஞ்சி,

பூண்டு சேர்த்து அரைத்த விழுது – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி, தனியாத் தூள் – தலா ஒரு டீஸ்பூன்

கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

வெல்லம் - சிறு துண்டு

புளித் தண்ணீர் – ஒரு கரண்டி

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அலங்கரிக்க

கொத்தமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவிவையுங்கள். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, தனியாத் தூள், மிளகாய்த் தூள் ஆகியற்றைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிவிட்டு பட்டாணி, தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் நான்கு அல்லது ஐந்து விசில் வரும்வரை வேகவிடுங்கள்.

வெந்த பிறகு கலவையை நன்றாக மசித்து அதோடு புளித் தண்ணீர், உப்பு, வெல்லம் கரம் மசாலா சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். ஒரு கிண்ணத்தில் இந்த சுண்டலைப் போட்டு அதன் மீது வெங்காயம் மல்லித்தழை தூவி, வடையைச் சேர்த்துப் பரிமாறுங்கள்

SCROLL FOR NEXT