என்னென்ன தேவை
காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
தக்காளி - 1
குடை மிளகாய் - 1
காலி ஃப்ளவர் துருவியது - 3 டீஸ்பூன்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
மொசரல்லா ச்சீஸ் துருவியது - 3 டீஸ்பூன்
மைதா - 100 கிராம்
பிரட் க்ரம்ஸ் - 50 கிராம்
எப்படிச் செய்வது
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் காலி ஃப்ளவர் பூவின் மேற்பகுதியை மட்டும் துருவி அதனுடன் சேர்த்து உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும். அடுப்பை அனைத்து விட்டு அதல் துருவி வைத்துள்ள ச்சீஸ் சேர்த்து கிளரவும். முன்னதாக காளானை நன்றாக கழுவி எடுத்து, வெள்ளை பட்டன் காளானில் உள்ள அடிப்பகுதியை உடைத்தால் உட்புறம் குழியாக இருக்கும். அதில் மசாலாவை கலவையை காளானின் குழியான அடிப்பகுதியில் நிரப்பவும். அதேபோல் இன்னொரு காளானிலும் மசாலாவை நிரப்பி ஒரு டூத் ஸ்டிக் மூலம் இணைத்தால் உருண்டையான வடிவம் கிடைக்கும். இதனை திக்கான மைதா மாவு கரைசலில் முக்கி எடுத்து பிரட் க்ரம்ஸில் புரட்டு எடுத்து சூடான எண்ணெயில் பொறித்து எடுத்தால் ஸ்டப் காளான் தயார்.
பிரேமா கார்த்திகேயன்