என்னென்ன தேவை?
மாம்பழத் துண்டுகள் - ஒரு கப்
வேகவைத்த துவரம் பருப்பு - அரை கப்
புளித் தண்ணீர் - சிறிது
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க
தனியா - ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு - அரை டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் - 6
எண்ணெய் - அரை டீஸ்பூன்
உலர் கொப்பரை (துருவியது) - 2 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வறுக்கும் பொருட்களுடன் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் பொன் வறுவலாக வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் புளித் தண்ணீர், உப்பு, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அத்துடன் தோல் நீக்கிய மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து, குழையாமல் வேகவிடுங்கள். பின்னர் வேகவைத்த பருப்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிடுங்கள். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து அதில் கொட்டுங்கள். துருவிய கொப்பரை, நெய் சேர்த்து இறக்கினால் சுவையான மாம்பழ உடுப்பி சாம்பார் தயார்.
லட்சுமி சீனிவாசன்