சமையலறை

சுரைக்காய் அல்வா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தோல் சீவித் துருவிய சுரைக்காய் – ஒரு கப்

நெய் – முக்கால் கப்

சர்க்கரை – ஒண்ணேகால் கப்

ஏலக்காய்த் தூள், குங்குமப் பூ – சிறிதளவு

முந்திரி, திராட்சை – 5 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை இல்லாத கோவா – 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, சுரைக்காய்த் துருவலைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். வதங்கியதும் லேசாகத் தண்ணீர் தெளித்து வேகவையுங்கள். தண்ணீர் நன்றாகச் சுண்டிவரும்போது சர்க்கரை சேர்த்துக் கிளறுங்கள்.

விரும்பினால் ஃபுட் கலர் சேர்த்து மீதமுள்ள நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறுங்கள். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, சர்க்கரை இல்லாத கோவா சேர்த்து நன்றாகக் கிளறி அல்வா பதம் வந்ததும் குங்குமப் பூ, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கிவையுங்கள்.

SCROLL FOR NEXT