சமையலறை

குழந்தைகள் விரும்பும் மதிய உணவு: கோதுமை கச்சோரி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - கால் கப்

உளுந்து, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 3

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை மாவுடன் தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல், உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்துதெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் தேங்காய்த் துருவல் போட்டுப் பொன்னிறமாக வறுத்தெடுங்கள். ஆறியதும் இவற்றுடன் சிறிது உப்பு கலந்து தூளாக்குங்கள்.

பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவில் சிறிது எடுத்து சின்ன சப்பாத்தியாக உருட்டி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் கலவை வைத்து மூடி உருட்டுங்கள். இவற்றைச் சூடான எண்ணெயில் போட்டு, இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எண்ணெய் வடித்து எடுங்கள்.

- சீதா சம்பத்

SCROLL FOR NEXT