என்னென்ன தேவை?
வறுத்த வேர்க்கடலை ஒரு கப்
சுக்குப் பொடி 2 டீஸ்பூன்
வெல்லம் அல்லது சர்க்கரை ஒரு கப்
நெய் 4 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையைத் தோல் நீக்கி, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக உடைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சுக்குப் பொடியைச் சேர்த்துக் கலக்குங்கள். வாணலியில் வெல்லம் அல்லது சர்க்கரையைப் போட்டு மிதமான தீயில் கரையவிடுங்கள். நன்றாகக் கரைந்து, பாகுபோல் வரும்போது கடலை கலவையைச் சேர்த்து நெய் விட்டுக் கிளறுங்கள். நன்றாகச் சேர்ந்து, கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி, குழவியால் சமப்படுத்துங்கள். துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.