என்னென்ன தேவை?
அரிசி மாவு, வெல்லம் - தலா அரை கப்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு - ஆறு
ஏலக்காய் - மூன்று
எப்படிச் செய்வது?
அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி நிழலில் காயவையுங்கள். பிறகு நைஸாக அரைத்து, மாவைச் சலித்து எடுத்துக்கொள்ளுங்கள். சலித்த மாவை வாணலியில் சூடுபட வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு வெள்ளைத் துணியில் சுற்றி, ஆவியில் வேகவைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைக் கரைத்து, கெட்டிப்பாகாகக் காய்ச்சுங்கள். இந்தப் பாகை அரிசி மாவுடன் கலந்துகொள்ளுங்கள். ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்து, மாவை உதிரியாகக் கிளறிக்கொள்ளுங்கள். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்துப் பரிமாறுங்கள்.
சீதா சம்பத்