என்னென்ன தேவை?
மைதா மாவு – அரை கப்
சோள மாவு , கோதுமை மாவு - தலா கால் கப்
வெல்லம் - கால் கப்
அத்திப் பழம், பேரீச்சை – தலா 10
உலர் திராட்சை - 25
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்த் தூள், உப்பு - சிறிதளவு
எப்படிச் செய்வது?
மாவுடன் ஏலக்காய்த் தூள், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, மேலே நெய் தடவி இரண்டு மணி நேரம் மூடிவையுங்கள். பழங்களைப் பொடியாக நறுக்கி அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அரைத்த பழக்கலவையை அதில் சேர்த்து, குறைந்த தீயில் கெட்டியாகக் கிளறி இறக்கிவையுங்கள். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறிதளவு எடுத்துக் கிண்ணம் போல் செய்து உலர் பழ உருண்டையை உள்ளே வைத்து உருட்டுங்கள். அதை வட்டமாகத் தேய்த்து தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுங்கள்.