சமையலறை

திகட்டாத திருச்சி விருந்து: கேழ்வரகு பக்கோடா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு, முருங்கைக் கீரை – தலா ஒரு கப்

முந்திரிப் பருப்பு - 50 கிராம்

மிளகாய்த் தூள், சோம்பு – தலா அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவுடன் முருங்கைக் கீரை, முந்திரிப் பருப்பு, சோம்பு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நீர் தெளித்துப் பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த மாவைச் சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு முறுகலாகப் பொரித்தெடுங்கள். அரிசி, கோதுமைக்கு அடுத்து திருச்சி மக்களின் உணவுப் பட்டியலில் கேழ்வரகு இடம்பிடிக்கிறது. சுவையும் சத்தும் நிரம்பிய இந்தக் கேழ்வரகு பக்கோடாவை மாலை நேரச் சிற்றுண்டியாகச் சுவைக்கலாம்.


அனுசியா பத்மநாதன்

SCROLL FOR NEXT