என்னென்ன தேவை?
பேரீச்சம் பழம் (விதை நீக்கியது) - 15 பாதாம் - 10 முந்திரி - 10 திராட்சை - 2 ஸ்பூன் பால் பவுடர் - 2 ஸ்பூன் தேங்காய் துருவல் - 4 ஸ்பூன் சர்க்கரை - 4 ஸ்பூன் நெய் - 2 ஸ்பூன் தேன் - 2 ஸ்பூன்
எப்படிச் செய்வது?
சர்க்கரையைப் பொடி செய்யவும். பாதாம், முந்திரியைத் தூள் செய்யவும். பேரீச்சையை தனியாக அரைத்து எடுக்கவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். இத்துடன் திராட்சை, பால் பவுடர், தேங்காய், தேன், நெய் ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும்.
கையில் நெய் தடவிக்கொண்டு, நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாகச் செய்யவும். எனர்ஜி லட்டு தயார். குறிப்பு: இது உடலுக்குத் தெம்பு தரக்கூடியது. குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் இதைச் சாப்பிட்டுவிட்டு விளையாடச் செல்லலாம். சோர்வு குறையும்.