சமையலறை

பலாச்சுளை பணியாரம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பலாச் சுளை 10

வெல்லத் தூள் 2 கப்

ஏலத் தூள் ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் அரை கப்

தோசை மாவு 6 கப்

எண்ணெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பலாச் சுளைகளைத் துண்டாக்கி வேகவையுங்கள். அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லத் தூள் சேர்த்து அரைத்து, தோசை மாவில் சேர்த்துக் கலக்குங்கள். மாவில் ஏலப் பொடியைச் சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் ஊறவிடுங்கள்.

குழிப் பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு, கரைத்த மாவைக் குழிகளில் பாதியளவு ஊற்றுங்கள். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள். பணியாரம் பிடிக்காதவர்கள் அப்பமாகச் சுட்டும் சாப்பிடலாம்.

SCROLL FOR NEXT