என்னென்ன தேவை?
நேந்திரம் பழம் - 2
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் – அரை மூடி
நெய் - 50 கிராம்
முந்திரி, பிஸ்தா – சிறிதளவு
ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு
சுக்குப் பொடி – கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து, பாகு காய்ச்சிக்கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிப் பால் எடுங்கள். நேந்திரம் பழத்தைத் தோல் உரித்து ஆவியில் வேகவையுங்கள். வெந்த பழத்தை ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். முந்திரி, பிஸ்தா இரண்டையும் நெய்யில் வறுத்துத் துருவிக்கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு நெய்யை ஊற்றுங்கள். அரைத்துவைத்திருக்கும் பழ விழுதைப் போட்டு நன்றாக வதக்குங்கள். பிறகு வெல்லப் பாகைச் சேர்த்துக் கிளறுங்கள். இரண்டும் நன்றாகக் கலந்து வாசனை வரும்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்காய்ப் பாலைச் சேர்த்து அதனோடு சுக்குப் பொடி, ஏலப் பொடி, முந்திரி, பிஸ்தா ஆகியவற்றைத் தூவி இறக்கிவையுங்கள். சத்தும் சுவையும் நிறைந்த பாயசம் இது.
ராஜபுஷ்பா