என்னென்ன தேவை?
வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி - தலா 1
சிவப்பு பச்சை மற்றும் மஞ்சள் நிறக் குடைமிளகாய் - 1
கேரட், ஆரஞ்சு, சாத்துக்குடி - தலா 1
லெட்யூஸ் - 1 கப்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எப்படிச் செய்வது?
காய்கறிகளை மெலிதாக நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள். ஆரஞ்சு, சாத்துக்குடியைத் தோலுரித்து சிறியதாக நறுக்குங்கள். இவற்றுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். அதில் கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள். இனிப்பும் புளிப்பும் கலந்து குழந்தைககள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த சாலட் சுண்டியிழுக்கும்.
செஃப் காவிரிநாடன்