சமையலறை

சாமை பணியாரம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

சாமை அரிசி - 2 கப்

உளுந்து, ஜவ்வரிசி - கால் கப்

வெந்தயம் - அரை டீஸ்பூன்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

கடலைப் பருப்பு - அரை டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சாமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து, ஏழு மணி நேரம் புளிக்கவையுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு சேர்த்துத் தாளியுங்கள். பிறகு இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள். லேசாக உப்பு சேர்த்து வதக்கி அதை மாவில் சேர்த்துக் கலக்குங்கள்.

குழிப் பணியாரக் கல் குழிகளில் எண்ணெய் தேய்த்து, இந்த மாவைப் பாதியளவுக்கு ஊற்றுங்கள். ஒரு புறம் வெந்து லேசாக வெந்ததும், திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்துவிடுங்கள்.

SCROLL FOR NEXT