சமையலறை

வெயிலுக்கு உகந்த உணவு: பரங்கிக்காய் பால் கூட்டு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பரங்கிக்காய் துண்டுகள் - 2 கப் (தோல் நீக்கியது)

தேங்காய்ப் பால், வெல்லம் – தலா கால் கப்

நெய் - அரை டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் நெய்விட்டு அது சூடானதும் பரங்கிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்குங்கள். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து, கரண்டியால் மசித்துக்கொள்ளுங்கள். பின்னர் அடுப்பைக் குறைவான தீயில் வைத்து வெல்லம் சேர்த்துக் கலக்குங்கள். வெல்லம் கரைந்து கெட்டியான பதத்துக்கு வந்ததும் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலந்து, இறக்கிவையுங்கள்.


சீதா சம்பத்

SCROLL FOR NEXT