சமையலறை

தேர்வு நேர சத்துணவு: காளான் சூப்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை ?

காளான் - ஒரு கப்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

தனியாத் தூள், மிளகுத் தூள் – தலா ஒரு டீஸ்பூன்

சோம்பு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்த்துத் தாளியுங்கள். பிறகு சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள். வெட்டி வைத்துள்ள காளான் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்குங்கள். காளான் வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிடுங்கள்.

அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடுங்கள். பிறகு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கி வையுங்கள். குக்கர் ஆறியதும் திறந்து, சூப்பில் சிறிதளவு கொத்தமல்லித் தழை, வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறலாம். இந்தக் காளான் சூப் சோம்பலை அகற்றி, சுறுசுறுப்பு தரும்.


அம்பிகா

SCROLL FOR NEXT