சமையலறை

சோயா கிரேவி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

புதினா இலைகள் கால் கப்

முந்திரி 5

பச்சை மிளகாய் 5

இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்

சோம்பு, சீரகம் தலா கால் டீஸ்பூன்

வெங்காயம் 1

சோயா உருண்டைகள் 10

எண்ணெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

புதினா இலைகள், முந்திரி, பச்சை மிளகாய், சோம்பு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது இவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். சோயா உருண்டைகளைக் கொதிக்கும் நீரில் போட்டு, பிறகு குளிர்ந்த நீரில் போட்டு அலசி பிழிந்துவையுங்கள்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு போட்டுத் தாளியுங்கள். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு அரைத்த மசாலா, சோயா உருண்டைகள், உப்பு சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போனதும் இறக்கிவையுங்கள். சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

SCROLL FOR NEXT