சமையலறை

சோக்கர்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

சோள மாவு ஒரு கப்

மைதா மாவு 2 கப்

வெண்ணெய் 4 டீஸ்பூன்

பொடித்த சர்க்கரை 2 கப்

சமையல் சோடா ஒரு சிட்டிகை

முந்திரி, திராட்சை - சிறிதளவு

எண்ணெய், உப்பு, நெய் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மைதா, சோள மாவு, சர்க்கரை, சோடா மாவு, உப்பு, வெண்ணெய் இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள். நன்றாக ஊறியதும் மாவிலிருந்து சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து உப்பலாக பாதுஷா போலச் செய்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். விரும்பினால் சூடு ஆறும் முன் மேலே சிறிது சர்க்கரையைத் தூவலாம். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைத் தூவி அலங்கரித்துப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT