சமையலறை

கமகமக்கும் காளான் சமையல்: காளான் செட்டிநாடு மசாலா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை

காளான் - 150 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 1

சின்ன வெங்காயம் - 8

தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்

பட்டை - 1

ஏலக்காய் - 1

லவங்கம் - 1

மிளகு தூள் - ஒன்றரை டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வரமிளகாய் - 8

தனியா - 2 டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 6 பல்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

எப்படிச் செய்வது

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் மிளகு, மிளகாய், தனியா, சோம்பு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு,சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கி தேங்காய் சேர்த்து அனைத்தையும் விழுதாக அரைக்கவும். பின் மீண்டும் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி போட்டு வதக்கி பின் தக்காளி, சுத்தம் செய்து நறுக்கிய காளான், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் அரைத்து வைத்த விழுது உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வேக வைக்கவும். இறக்கும் முன்பு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சாதம் மட்டுமல்ல இட்லி, தோசை சப்பாத்திக்கு இது ஏதுவாக இருக்கும்.


பிரேமா கார்த்திகேயன்

SCROLL FOR NEXT