சமையலறை

பாலடை பிரதமன்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

அரிசி அடை - 100 கிராம்

பால் - 1 லிட்டர்

சர்க்கரை - 200 கிராம்

நெய் - 2 டீஸ்பூன்

முந்திரி, திராட்சை - சிறிது

எப்படிச் செய்வது?

அடையை நீரில் நன்கு கழுவி, பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் பால் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். ஒரு லிட்டர் பால் அரை லிட்டர் ஆகும்போது, ஊறவைத்த அடையை அதனுடன் சேர்க்கவும். அடை நன்கு மெத்தென்று வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். (விருப்பப்பட்டால் மில்க் மெய்ட் சிறிது சேர்த்துக்கொள்ளலாம்). கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து, நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துக் கொட்டவும். (சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.)

SCROLL FOR NEXT