சமையலறை

மணக்கும் மதுரை: கரண்டி ஆம்லேட்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

முட்டை - 4

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். சற்று பெரிய குழி கொண்ட கரண்டியை அடுப்பில் வைத்து, அதில் லேசாக எண்ணெய் தடவுங்கள். அதில் சிறிதளவு முட்டைக் கலவையை ஊற்றுங்கள். சிறிது நேரம் கழித்துத் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுங்கள். ஒவ்வொன்றாகச் செய்ய நேரமாகிறது என்று நினைக்கிறவர்கள், குழிப்பணியாரச் சட்டியிலும் இதைச் செய்யலாம். மிருதுவாக இருக்கும் இந்தக் கரண்டி ஆம்லெட்டைச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- ஜெ. புஷ்பலதா, மதுரை

SCROLL FOR NEXT