என்னென்ன தேவை?
சுரைக்காய் - 1
இட்லி அரிசி - 400 கிராம்
துவரம் பருப்பு, உளுந்து – தலா 50 கிராம்
கடலைப் பருப்பு - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 15
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி (துருவியது)
மிளகு, சீரகம் - கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 30
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க - தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அரிசி, பருப்பு வகைகளை ஐந்து மணி நேரம் ஊற வையுங்கள். சுரைக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி அவற்றுடன் மிளகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், அரிசி, பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். அதில் துருவிய தேங்காய், நறுக்கிய கருவேப்பிலை போட்டு மாவுடன் கலந்துகொள்ளுங்கள். மாவில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கலந்து, அடையாகச் சுட்டு எடுங்கள்.