சமையலறை

லஸ்ஸி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கெட்டித் தயிர் - ஒரு கப்

சர்க்கரை - 4 டீஸ்பூன்

பாதாம் - 5

பட்டை பொடி - சிறிதளவு

ரோஸ் எசென்ஸ் - சில துளிகள் (விரும்பினால்)

எப்படிச் செய்வது?

தயிர் புளிப்பில்லாமல் இருக்க வேண்டும். தயிரை நன்றாகக் கலக்கி அதனுடன் சர்க்கரை, பட்டைப் பொடி போட்டு மிக்ஸியில் அடித்துக்கொள்ளுங்கள். விரும்பினால் ரோஸ் எசென்ஸ் சேர்க்கலாம். நுரை பொங்கும் கலவையை டம்ளரில் ஊற்றி, மேலே பாதாமைத் தோல் நீக்கித் துருவிச் சேருங்கள். விரும்பினால் ஐஸ்கட்டிகளைச் சேர்த்து ஜில்லென்று பருகலாம்.

SCROLL FOR NEXT