சமையலறை

வயிற்றுக்கு உகந்த உணவு: இஞ்சி - எலுமிச்சை பானம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

எலுமிச்சம் பழம் - 4

இஞ்சி - 50 கிராம்

தண்ணீர் - 5 கப்

சர்க்கரை - அரை கிலோ

உப்பு - 2 சிட்டிகை

எப்படிச் செய்வது?

சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வையுங்கள். கலவை கொதித்ததும் இஞ்சியை நசுக்கிச் சேருங்கள். பிறகு இரண்டு சிட்டிகை உப்பைச் சேர்த்து இறக்கிவையுங்கள். கலவை சிறிது ஆறியதும் பிழிந்துவைத்திருக்கும் எலுமிச்சை சாறை அதில் ஊற்றிக் கலக்குங்கள். இந்தக் கலவையை வடிகட்டிப் பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். விரும்பியபோது ஒரு டம்ளரில் இந்தக் கலவையைச் சிறிது ஊற்றி, அதில் தேவையான அளவுக்குக் குளிர்ந்த நீர் சேர்த்துப் பருகுங்கள்.

- செல்லம்

SCROLL FOR NEXT