சமையலறை

கமகம கற்றாழை பால்கறி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கற்றாழை 2 மடல்

சின்ன வெங்காயம் 10

தக்காளி 2

தேங்காய்ப் பால் 4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிதளவு

உப்பு தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய் 6

சோம்பு கால் டீஸ்பூன்

தனியா, கடலைப் பருப்பு அரை டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்

கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு

எப்படி செய்வது ?

கற்றாழையைத் தோல் சீவி, சதைப் பகுதியைத் தனியே எடுத்து, சிறு சிறு துண்டுகளாக்குங்கள். அவற்றைத் தண்ணீரில் நன்றாக அலசுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, பொடித்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் கற்றாழைத் துண்டுகளைச் சேர்த்து வதக்குங்கள். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவையுங்கள். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துவந்ததும் தேங்காய்ப் பால் ஊற்றி இறக்கிவையுங்கள். மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT