சமையலறை

குழந்தைகள் விரும்பும் மதிய உணவு: பனீர் ஸ்டஃப்டு பராத்தா

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்

பனீர் - 100 கிராம்

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

இஞ்சி - ஒரு துண்டு

புளித்த தயிர் - அரை கப்

எண்ணெய் - கால் கப்

பச்சை மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொத்தமல்லித் தழை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரையுங்கள். அரைத்த விழுதுடன் கோதுமை மாவு, உப்பு, புளித்த தயிர் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். பனீரைத் துருவி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.

பிசைந்த மாவை எலுமிச்சை அளவுக்கு எடுத்து உருட்டி, வட்டமாக இடுங்கள். அதன் மேல் இரண்டு டீஸ்பூன் பனீர் துருவலை வைத்து மூடி, சப்பாத்தி போல இடுங்கள். அதைச் சூடான தாவாவில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விடுங்கள். இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுங்கள்.

- சீதா சம்பத்

SCROLL FOR NEXT