என்னென்ன தேவை?
தினை அரிசி - அரை கப்
வெல்லம் - கால் கப்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 6
தேன் - 2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
தினை அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் விட்டு முந்திரியைச் சேர்த்து வறுத்தெடுங்கள். பொடித்த தினையுடன் உப்பு துளி கலந்து வெந்நீர் தெளித்து, வெல்லத் தூள், தேங்காய்த் துருவல் கலந்து ஆவியில் வேகவையுங்கள்.
வெந்ததும் உதிர்த்து, தேன் சேர்த்துக் கலக்குங்கள். ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறுங்கள்.