சமையலறை

ஸ்பெஷல் மிக்சர்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

கடலை மாவு - 4 கப்

அரிசி மாவு - 1 கப்

பெருங்காயம் - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள்,

மிளகுப் பொடி - தலா 1 டீஸ்பூன்

எண்ணெயில் பொரித்த கறிவேப்பிலை - சிறிதளவு

உலர்ந்த திராட்சை - 3 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

அலங்கரிக்க:

வேர்க்கடலை - கால் கப் முந்திரி,

பொட்டுக்கடலை - தலா 6 டீஸ்பூன்

பாதாம் பருப்பு - 10

எப்படிச் செய்வது?

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம் இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். சூடான எண்ணெய்க்கு நேராக காராசேவு தட்டைப் பிடித்து, பிசைந்த மாவை அந்தத் தட்டில் ஊற்றித் தேய்க்கவும். எண்ணெயில் விழுந்த காராசேவு வெந்ததும், எடுக்கவும். அதே மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பூந்திக் கரண்டியில் ஊற்றித் தேய்த்து, பூந்தியாகப் பொரித்தெடுக்கவும். இன்னொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வேர்க்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் காராசேவு, பூந்தி, வறுத்த பருப்புகள் ஆகியவற்றைச் சேர்க்கவும். இவை சூடாக இருக்கும்போதே மிளகாய்த் தூள், மிளகுத் தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்து, காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

குறிப்பு: ராஜகுமாரி

SCROLL FOR NEXT