என்னென்ன தேவை?
கெட்டித் தயிர் – ஒன்றரை கப்
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு,
உளுந்து, காராமணி - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய், இஞ்சி (பொடியாக நறுக்கியது)
தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துத் தயிரில் கொட்டிக் கலக்குங்கள். எண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டுங்கள். இந்த ராய்தா புரதச்சத்து நிறைந்தது.