சமையலறை

நாவூறும் நெல்லைச் சுவை: அவியல்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வெள்ளைப் பூசணி அல்லது சௌசௌ- 1 கப்

வாழைக்காய், கேரட், முருங்கைக்காய் – தலா 1

சேனை - சிறிய துண்டு

கத்தரிக்காய் – 2

மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன்

தேங்காய் - 1 கப்

சீரகம் - 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 6

தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - 1 பிடி

தயிர் - 1 கரண்டி

எப்படிச் செய்வது?

காய்கறிகளை நீளமாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளுங்கள். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் அரைத்துத் தயிருடன் கலந்து, கலவையில் ஊற்றுங்கள். அதனுடன் சிறிது துருவிய தேங்காயைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கினால் கமகமக்கும் அவியல் தயார்.


கமலா மூர்த்தி

SCROLL FOR NEXT