சமையலறை

வயிற்றுக்கு உகந்த உணவு: வாழைத்தண்டு தயிர் பச்சடி

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

வாழைத் தண்டு - ஒரு கப் (நறுக்கியது)

பாசிப் பருப்பு - அரை கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

தயிர் - அரை கப்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பைக் குழைய விடாமல் நெத்துப் பதமாக வேகவிடுங்கள். பொடியாக நறுக்கிய வாழைத்தண்டைத் தனியாக வேகவைத்து எடுங்கள். ஒரு கிண்ணத்தில் வாழைத்தண்டு, பாசிப் பருப்பு, தேங்காய்த் துருவல், தயிர், உப்பு சேர்த்துக் கிளறுங்கள். கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கித் தூவிப் பரிமாறுங்கள்.

- செல்லம்

SCROLL FOR NEXT