சமையலறை

அழகர்கோயில் தோசை

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

அரிசி - ஒரு கப்

கருப்பு உளுந்து - அரை கப்

சுக்குப் பொடி, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

நெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்து இரண்டையும் ஊறவைத்து, மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். மாவில் உப்பு போட்டுக் கலந்து, புளிக்கவிடுங்கள். மறுநாள் காலை மாவில் சுக்குப் பொடி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்குங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டு கலக்குங்கள். இந்த மாவைச் சூடான தோசைக் கல்லில் ஊற்றி, சுற்றிலும் நெய் விட்டு வேகவிட்டு எடுங்கள்.

SCROLL FOR NEXT