சமையலறை

நவராத்திரி நல்விருந்து! - கொள்ளு சுண்டல்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

கொள்ளு - அரை கப்

வெங்காயம் – 1

தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - கால் டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கொள்ளுப் பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்றாக வேகவையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள். நறுக்கிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துச் சூடுபடக் கிளறியதும், அதனுடன் கொள்ளுப் பருப்பைச் சேர்த்துக் கிளறுங்கள். தேங்காய்த் துருவல் கலந்து இறக்கிவையுங்கள்.

சீதா சம்பத்

SCROLL FOR NEXT