என்னென்ன தேவை?
குடைமிளகாய், தக்காளி தலா ஒன்று
தயிர் ஒரு கப்
கடுகு அரை டீஸ்பூன்
உளுந்து ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குடைமிளகாயின் விதைகளை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் குடைமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து வதக்குங்கள். தக்காளியை மிக்ஸியில் அரையுங்கள். கெட்டித் தயிரில் உப்பு, தக்காளிச் சாறு, வதங்கிய குடைமிளகாய் சேர்த்துக் கலக்குங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கிள்ளிய காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து, பச்சடியில் கொட்டுங்கள். சாம்பார் சாதம், பிரியாணிக்குத் தொட்டுக்கொள்ளச் சுவையாக இருக்கும்.