சமையலறை

சுவையான செஃப் சமையல்! - காளான் புலாவ்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - அரை கிலோ

பட்டன் காளான் - 100 கிராம்

பச்சைப் பட்டாணி - 100 கிராம்

வெங்காயம் - 4

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

தேங்காய்ப் பால் - அரை கப்

பச்சை மிளகாய் - 3

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

ஏலக்காய், பட்டை, கிராம்பு - சிறிதளவு

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

முந்திரி - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

எணணெய், நெய் - 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

காளானை உப்பு நீரில் போட்டு அலசுங்கள். காளானின் பின்புறம் இருக்கும் பழுப்பு நிறம் போகும்வரை சுத்தம் செய்யுங்கள். குக்கரில் எண்ணெய், நெய் விட்டுச் சூடாக்கி கிராம்பு, ஏலக்காய், பட்டை போட்டுத் தாளியுங்கள். இஞ்சி-பூண்டு விழுது , நறுக்கிய வெங்காயம், புதினா கொத்தமல்லி, காளான், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். கரம் மசாலா, உப்பு, தேங்காய்ப் பால், அரிசி சேர்த்துத் தேவையான தண்ணீர் ஊற்றி மூடிவிடுங்கள். 2 விசில் வந்ததும் அடுப்பைக் குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்துப் பிறகு அணைத்துவிடுங்கள். சூடு ஆறியதும் நெய்யில் பொரித்த முந்தரி, வெங்காயத்தைச் சேர்த்துப் பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி தூவிப் பரிமாறுங்கள். வெங்காய ராய்தாவுடன் பரிமாறுங்கள்.


செஃப் காவிரிநாடன்

SCROLL FOR NEXT