என்னென்ன தேவை?
ஜவ்வரிசி - ஒரு கப்
உருளைக் கிழங்கு - 2 (வேகவைத்து மதித்தது)
பச்சை மிளகாய் - 5
கேரட், கோஸ் (துருவியது) - தலா ஒரு கைப்பிடி
புதினா, மல்லி (பொடியாக நறுக்கியது) - ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஜவ்வரிசியை நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஊறவையுங்கள். ஊறிய ஜவ்வரிசியோடு மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், காய்கறித் துருவல், உப்பு, புதினா, மல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். இந்தக் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
- மேகலா