சமையலறை

திகட்டாத திருச்சி விருந்து: தக்காளி புலவ்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

பச்சரிசி – ஒரு கப்

தக்காளி - 4

சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி

பூண்டு - 4 பல்

இஞ்சி – சிறு துண்டு

உரித்த பச்சைப் பட்டாணி - முக்கால் கப்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

பச்சரிசியை வாணலியில் நெய்விட்டு வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் மூன்று கப் வெந்நீர் சேர்த்து குக்கரில் போட்டு மூடிவிடுங்கள். இதை அடுப்பில் வைக்கக் கூடாது. இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் உரித்த வெங்காயத்தைச் சேர்த்து சுற்றியெடுங்கள்.

தக்காளியை வெந்நீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து எடுத்து தோல் நீக்கி, மசித்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து, பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டுத் தாளியுங்கள். பிறகு இஞ்சி-பூண்டு விழுது, மசித்த தக்காளி சேர்த்துக் கிளறுங்கள். புதினாவை நறுக்கிப் போடுங்கள். பச்சைப் பட்டாணி, உப்பு, கீறிய பச்சை மிளகாய் இரண்டு, அரை டீஸ்பூன் பிரியாணிப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். அதில் மல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி, அரிசியுடன் சேர்த்துக் கலந்து குக்கரை அடுப்பில் வையுங்கள். தொடர்ந்து 6 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடுங்கள். சூடு தணிந்ததும் குக்கரைத் திறந்து சிறிது நெய் சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.


அனுசியா பத்மநாதன்

SCROLL FOR NEXT