சமையலறை

வயிற்றுக்கு உகந்த உணவு: மணத்தக்காளி தண்ணீர் சாறு

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு

சின்ன வெங்காயம் - அரை கப் (பொடியாக நறுக்கியது)

சீரகம், நெய் – தலா 2 டீஸ்பூன்

தேங்காய்ப் பால் - ஒரு கப்

அரிசி களைந்த நீர் - 3 கப்

எப்படிச் செய்வது?

பொடியாக நறுக்கிய மணத்தக்காளி கீரையை அரிசி கழுவிய நீரில் போட்டு வேகவையுங்கள். அதில் தேவையான அளவு உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். நெய்யில் சீரகத்தைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, கீரையில் கொட்டிப் பரிமாறுங்கள்.

- செல்லம்

SCROLL FOR NEXT