சமையலறை

தேர்வு நேர சத்துணவு: பனீர் பச்சைப் பயறு சாதம்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை ?

பனீர் - 200 கிராம்

பச்சைப் பயறு -100 கிராம்

பாசுமதி அரிசி - 2 டம்ளர்

வெங்காயம் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

தனி மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்

பட்டை - சிறிய துண்டு

ஏலக்காய் - 1

லவங்கம் - 2

வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

தயிர் - 2 டீஸ்பூன்

தக்காளி - 1

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றைப் போட்டுப் பொரித்துக்கொள்ளவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்து வதக்கியதும் பனீர், ஊறவைத்துள்ள பச்சைப் பயிறு சேர்த்து நன்றாக வதக்குங்கள். அதில் கொத்தமல்லி, மிளகாய்த் தூள், தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு பாசுமதி அரிசி சேர்த்து நன்றாகக் கிளறிவிடுங்கள்.

தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிறு தீயில் குக்கரை பத்து நிமிடம் மூடிவையுங்கள். பத்து நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து கொத்தமல்லித் தழை சேர்த்தால் சுவையான பனீர் பச்சைப் பயறு சாதம் தாயார்.


அம்பிகா

SCROLL FOR NEXT