சமையலறை

வகைவகையா வடாம், வற்றல், ஊறுகாய்: சுக்காங்காய் வற்றல்

செய்திப்பிரிவு

என்னென்ன தேவை?

சுக்காங்காய் (கோவக்காயைவிடச் சிறியதாக இருக்கும்) - 1 கப்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

புளித்த கெட்டித் தயிர் - ஒன்றரை கப்

காய்ந்த மிளகாய் – 6

எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சுக்காங்காயைச் சிறு துண்டுகளாக வட்டமாக நறுக்கி, வெயிலில் இரண்டு நாட்கள் காயவிடுங்கள். வெந்தயம், உப்பு, மிளகாய் இவற்றைத் தயிரில் ஆறு மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு அவற்றைக் கூழ் போல அரைத்துக்கொள்ளுங்கள். காய்ந்த சுக்காங்காயை அதில் சேர்த்துக் கலக்கவும். பிறகு சுக்கங்காயை வெயிலில் நான்கு முதல் ஐந்து நாட்கள் காயவைத்து எடுங்கள். உறைப்பும் புளிப்பும் சுக்காங்காயில் இறங்கி சுவை அருமையாக இருக்கும். சுக்காங்காயை மிதிக்காய் என்றும் சொல்வார்கள்.


சுதா செல்வகுமார்

SCROLL FOR NEXT