சமையலறை

கொள்ளு - பூண்டு பொடி

ப்ரதிமா

என்னென்ன தேவை?

கொள்ளு - 2 கப்

பொட்டுக் கடலை - அரை கப்

மிளகு - 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 3

பூண்டு - 10 பல்

எப்படிச் செய்வது?

கொள்ளை நன்கு புடைத்து, சுத்தம் செய்யவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் முதலில் கொள்ளைச் சேர்த்து நன்கு வறுக்கவும். படபடவெனப் பொரிந்தவுடன் ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். பின்பு அதே போல் மிளகு, பொட்டுக் கடலையை வறுக்கவும்.

கடைசியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், பூண்டு இவற்றைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்துப் பொடிக்கவும். இந்தப் பொடியைச் சூடான சாதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிட, சுவையாக இருக்கும்.

குறிப்பு: சுபாஷினி வெங்கடேஷ்

SCROLL FOR NEXT