சமையலறை

கலக்கலான காஷ்மீர் உணவு: தால் காஷ்மீரி

ப்ரதிமா

தால் காஷ்மீரி

என்னென்ன தேவை?

வேகவைத்த துவரம் பருப்பு – 1 கப்

உப்பு – தேவைக்கு

தக்காளி – 2

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 3 பல்

இஞ்சி – சிறிய துண்டு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு, சீரகம் – தலா 1 டீஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா 1 டீஸ்பூன்

கரம் மசாலா, தனியாத் தூள் – தலா 1 டீஸ்பூன்

மல்லித் தழை – 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, பெருங்காயம், பூண்டு, வெங்காயம், அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றைப் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.

அதனுடன் மஞ்சள் தூள், தனியாத் தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். அரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் வேகவைத்துள்ள துவரம் பருப்பைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.

அதே நேரத்தில் மற்றொரு வாணலியில் நெய் விட்டுச் சீரகத்தைப் போட்டுத் தாளித்து, காஷ்மீரி மிளகாய்த் தூளைச் சேர்த்து வதக்குங்கள். இதைக் கொதித்துக்கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மீண்டும் ஒரு கொதிவந்ததும் இறக்கி மல்லித்தழையைத் தூவிப் பரிமாறுங்கள்.

SCROLL FOR NEXT