சுண்டல் இல்லாமல் நவராத்திரி நிவேதனம் நிறைவு பெறாது. பார்க்க தங்கமணி முத்துக்கள் போல பளபளப்புடன் இருக்கும் பொன்மணிச் சுண்டலை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.
என்னென்ன தேவை?
வேகவைத்த சோளமுத்துக்கள் - 1 ஆழாக்கு
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகு - 10
தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன்
எலுமிச்சம்பழம் - 1 மூடி
சர்க்கரை - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை (நறுக்கியது) - 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சோளக் கதிரை வேகவைத்து, பிறகு சோளமணிகளை உதிர்க்கவும் (உதிர்த்த சோளமணிகள் கடையில் கிடைப்பதால் இன்னும் வேலை எளிதாகிவிடுகிறது). தேங்காய், மிளகு, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் சோளம், அரைத்த தேங்காய்க் கலவை ஆகியவற்றைப் போட்டு வதக்கி எடுத்து இறக்கியதும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதில் பெருங்காயம் சேர்க்காமல் இருந்தால் சோளத்தின் இயற்கையான வாசனையோடு நன்றாக இருக்கும். விருப்பமானால் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கலாம். கதம்பச் சுவையோடு இருக்கும் இந்தச் சுண்டல்.
குறிப்பு: மீனலோசனி பட்டாபிராமன்