சமையலறை

குழந்தைகளுக்கான மாலை விருந்து - கோதுமை டைமண்ட்

ப்ரதிமா

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

ரவை - 2 டீஸ்பூன்

வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

எப்படிச் செய்வது?

கோதுமை மாவுடன் மேல் குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து பத்து நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளுங்கள். மாவைச் சப்பாத்தி வடிவில் திரட்டி டைமண்டு வடிவில் கத்தியாலோ டீஸ்பூனாலோ வெட்டுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெட்டி வைத்துள்ளவற்றைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.

SCROLL FOR NEXT