சமையலறை

ஆலு முர்முரா

ப்ரதிமா

என்னென்ன தேவை?

பொரி - 3 ஆழாக்கு

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1

பொட்டுக்கடலைப் பொடி - 1 டீஸ்பூன்

வறுத்த நிலக்கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

கொத்துமல்லித் தழை (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - 1 சிட்டிகை

சீரகம் - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கிச் சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து வெடித்ததும் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, உருளைக்கிழங்கு, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பொரியைத் தண்ணீரில் முக்கி உடனே வெளியே எடுத்து தண்ணீர் இல்லாமல் பிழியவும். அதை வாணலியில் போட்டு தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நிலக்கடலைப் பருப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கினால் ஆலு முர்முரா தயார்.

- ‘தி இந்து’ நவராத்திரி மலரில் இருந்து

குறிப்பு: மீனலோசனி பட்டாபிராமன்

SCROLL FOR NEXT