கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் - 150 கிராம்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பால் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
வறுத்த முந்திரி, திராட்சை - சிறிது
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
கேழ்வரகு மாவு, பால் பவுடர் ஆகியவற்றைச் சிறிது தண்ணீரில் தோசை மாவு போல கரைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொதிக்கவிடுங்கள். அதனுடன் கரைத்துவைத்துள்ள கேழ்வரகு மாவைக் கொட்டிக் கிளறுங்கள். கலவை இறுகும்போது அதனுடன் நெய், எண்ணெய் விட்டுக் கைவிடாமல் கிளறுங்கள். வாணலியில் அல்வா கலவை சுருண்டு வரும்போது ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து இறக்கிப் பரிமாறுங்கள்.