கனகதாரா என்றால் தங்க மழை என்று அர்த்தம் நெல்லிக்காய் உடல் ஆரோக்கியத்துக்குப் பல வகையிலும் நன்மை செய்து உடலைப் பொன் போல் ஆக்கும். நெல்லிக்காய் வைத்து புளியோதரை தயாரித்து அம்பாளுக்கு நிவேதனம் செய்யலாமே.
என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 ஆழாக்கு
நெல்லிக்காய் - 5
புளி - கொட்டைப்பாக்கு அளவு
உப்பு - தேவையான அளவு
கறுப்பு எள்ளுப் பொடி - 1 டீஸ்பூன்
வெந்தயமும் மஞ்சளும் சேர்த்து வறுத்து அரைத்த பொடி - முக்கால் டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
நிலக்கடலை - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எப்படிச் செய்வது?
அரிசியை ஊறவைத்து சாதம் வடித்து ஒரு தாம்பாளத்தில் போடவும். உதிராக வடிப்பது நல்லது. நெல்லிக்காயைச் சுத்தம் செய்து அதன் மீது அளவாகக் கொதிக்கும் நீரை விடவும். அதோடு புளியையும் போட்டு மூடி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து நெல்லிக்காயின் விதைகளை நீக்கவும். அதோடு உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். வாணலியில் என்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், பருப்பு வகைகள் கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து கறுப்பு எள்ளுப் பொடி, வெந்தய - மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி எடுத்து, ஆறிய சாதத்தில் சேர்த்துக் கிளறவும்.
குறிப்பு: மீனலோசனி பட்டாபிராமன்