சின்ன உருளைக் கிழங்கு - 20, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, வெண்ணெய், சீரகம், சோம்புத் தூள் - தலா 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 6 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 4 டீஸ்பூன், கொத்தமல்லி - அலங்கரிக்க, உப்பு - தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு - தலா 2 டீஸ்பூன்
உருளைக் கிழங்கை அதிகம் குழையாமல் வேகவையுங்கள். வேகவைத்த உருளைக்கிழங்கை இரண்டு உள்ளங்கைகளின் நடுவே வைத்து லேசாக அழுத்துங்கள். தோலுரிக்கத் தேவையில்லை. அவற்றை எண்ணெய்யில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் வெண்ணெய் சேர்த்துச் சீரகம் போட்டுத் தாளியுங்கள். பின்னர், தக்காளி சாஸ், பொரித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, மல்லித்தழை ஆகியவற்றைத் தூவி, சூடாகப் பரிமாறுங்கள்.